News January 30, 2026
தஞ்சாவூர்: சாலை விபத்தில் திமுக பெண் நிர்வாகி உயிரிழப்பு

தஞ்சாவூர், கல்லூராணிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி(56). திமுக மகளிர் அணி துணை செயலாளரான இவர், பைக்கில் கனவருடன் செருவாவிடுதி சாலையில் சென்றுள்ளார். அப்போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால், தவறி விழுந்தவர் பலத்த காயமடைந்தார். பின்னர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு, பின் தஞ்சாவூர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Similar News
News February 2, 2026
தஞ்சை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

தஞ்சை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
தஞ்சை: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
தஞ்சை: கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா அருகே ஈச்சங்கோட்டையில் உள்ள காத்தாயி அம்மன் கோயிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் திருடிச் சென்றனர். இதுகுறித்து ஓரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


