News December 26, 2025

தஞ்சாவூர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

தஞ்சாவூர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <>இ-பெட்டகம்<<>> என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

Similar News

News December 28, 2025

தஞ்சை: SBI வங்கியில் வேலை அறிவிப்பு!

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: ரூ.6.20 லட்சம் (ஆண்டுக்கு)
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 28, 2025

தஞ்சாவூா் மாவட்ட நிர்வாகம் முக்கிய தகவல்

image

தஞ்சை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த பருவமழையின் காரணமாக பாதிப்படைந்த பயிர்களை வேளாண் துறை, வருவாய்த் துறையினா் கணக்கெடுக்கும் பணி மேற்கொண்டு வந்தனா். இதன் மூலம், 9 ஆயிரத்து 833 ஏக்கரில் பயிா்கள் மழையால் 33 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்பு என்பது தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக நிவாரணம் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News December 28, 2025

தஞ்சை: பாலியல் குற்றவாளி அதிரடி கைது

image

கேரளாவில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த தஞ்சையை சேர்ந்த வாலிபர் பாலாஜி (26), 2 மாத தேடலுக்குப் பிறகு தஞ்சையில் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது சிறுமியுடன் பழக்கமேற்பட்டு, அவரை பாலாஜி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாலாஜி மீது கொலை முயற்சி, திருட்டு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!