News June 15, 2024

தஞ்சாவூர் சந்தன மாலை தயாரிப்பு குறித்து பயிற்சி 

image

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் சார்பில் அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் சந்தன மாலை தயாரிப்பு குறித்து ஒரு‌ நாள் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் சந்தன மாலைகள் கைவினைப் கலைஞர்களால் நுணுக்கமான கலை படைப்புக்களுடன் மாலை உருவாக்கம் செய்யப்பட்டு விழாக்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாலை தயாரிப்பு குறித்து நடைபெற்ற பயிற்சி முகாமில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Similar News

News March 1, 2026

தஞ்சை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் செய்யவும்<<>> அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

தஞ்சை: பேருந்தில் வந்த பெண்ணிடம் நகை திருட்டு!

image

சேலத்திலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்தில் வந்த சுந்தரி (53) என்பவரது கைப்பை துண்டிக்கப்பட்டு, அதிலிருந்த 14 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன. வல்லம் அருகே வந்தபோது மர்ம நபர்கள் இந்த கைவரிசையைக் காட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 1, 2026

தஞ்சாவூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான, மார்ச் மாத ரேஷன் பொருட்கள் மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், நேரடியாக வீடுகளுக்கே வந்து விநியோகம் செய்யப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். அதன்படி மாவட்டத்தில் உள்ள 1,183 நியாய விலைக் கடைகள் மூலம் 48,817 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!