News March 21, 2024
தஞ்சாவூர்: இளைஞர் கொலை… அதிரடி தீர்ப்பு

திருவிடைமருதூர் தாலூகா ஆவணியாபுரத்தில் இன்ஜினியரிங் மாணவர் முஹம்மது முன்தஸிரை (19), காதல் விவகாரத்தில் நண்பர்களே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் இஜாஸ் அகமது (20), ஜலாலுதீன் (19), சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலை வழக்கில் இஜாஸ் அகமது, ஜலாலூதின் ஆகியோருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
Similar News
News August 16, 2025
589 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

சுதந்திர தினத்தையொட்டி, ஊராட்சிகளில் நீடித்த வளா்ச்சி இலக்குகள் நிா்ணயம் செய்தல் தொடா்பாக மாவட்டத்திலுள்ள 589 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற அனைத்து துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
தஞ்சை: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, தஞ்சை மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8012232577) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News August 16, 2025
தஞ்சாவூரில் பலரும் அறிந்திடாத கடற்கரை!

தஞ்சையில் அமைந்துள்ள மனோரா கடற்கரை பலரும் அறிந்திடாத கடற்கரையாகும். இக்கடற்கரையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மனோரா கோட்டையும் கலங்கரை விளக்கமும் அமைந்துள்ளதுள்ளது. இந்த கோட்டை, 1814-1815 காலகட்டத்தில் நெப்போலியன் போனபார்ட்டின் படையை ஆங்கிலேயப் படை முறியடித்ததை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்டதாகும். மேலும் இங்கு வீசும் இயற்கையான காற்று பலருக்கும் பிடித்த ஒன்றாகவுள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க