News February 23, 2026

தஞ்சாவூர்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 9.47,278, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 10,04,012 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 155 பேர் என மொத்தம் 19,51,445 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 25, 2026

தஞ்சை: ரேஷன் கார்டில் பிரச்சனையா? உடனே கூப்டுங்க!

image

உங்கள் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களில் தரமின்மை, புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு உதவி எண் செயல்பாட்டில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? ஆம், 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது ஸ்மார்ட் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் உதவி பெறலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News February 25, 2026

தஞ்சை: மண்டல அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (பிப்.24) 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு 8 சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நேற்று துவங்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் இந்த பயிற்சி வகுப்பானது துவங்கப்பட்டது.

News February 25, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று (பிப்.24) இரவு 10 முதல் (பிப்.25) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!