News September 4, 2025
தஞ்சாவூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் (செப்டம்பர் 3) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!
Similar News
News September 5, 2025
தஞ்சாவூர்: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

தஞ்சாவூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
News September 5, 2025
தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை பகுதிகள்

தஞ்சாவூரில் இயங்கி வரும் துணை மின் நிலையங்களில் நாளை செப்.06 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் ⏩தஞ்சாவூர், ⏩பாபநாசம், ⏩அய்யம்பேட்டை, ⏩மெலட்டூர், ⏩சாக்கோட்டை, ⏩கும்பகோணம் ரூரல்,⏩ பூண்டி, ⏩சாலையாமங்கலம், ⏩திருப்புறம்பியம் ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரவு மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களும் SHARE பண்ணுங்க!
News September 5, 2025
தஞ்சாவூர் விவசாயிகளுக்கு Good News!

தஞ்சாவூர், திருவோணம் வட்டாரத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் சிறு, குரு விவசாயிகள் அனைவருக்கும் மண்புழு உர தொட்டி அரசு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இதனை ரூ.540 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ஆதார், கணினி சிட்டா, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உடன் வேளாண்துறையை அணுகி பெற்று கொள்ளலாம் என திருவோணம் வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மற்றவர்களும் SHARE பண்ணுங்க!