News December 30, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.29) இரவு 10 முதல், காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 8, 2026
தஞ்சை: இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

தஞ்சை மாவட்டத்தில் 7 லட்சத்து 10 ஆயிரத்து 131 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று (ஜன.8) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு, ரொக்கம் ரூ. 3 ஆயிரம், வேட்டி, சேலை ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக நியாயவிலை கடைகளில் வழங்கப்படும். எனவே இதனை பெற்று கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
தஞ்சை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News January 8, 2026
தஞ்சை மாவட்ட கலெக்டர் தகவல்!

போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக், ரப்பர், டயர் போன்ற பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் பாதிப்பு ஏற்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். எனவே, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


