News December 26, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(டிச.25) இரவு 10 முதல் இன்று(டிச.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

Similar News

News January 1, 2026

தஞ்சை: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், <>https://cms.rbi.org.in <<>>என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும் சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE NOW!

News January 1, 2026

தஞ்சை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 142 பேர்

image

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணை கால்வாய் பிணம் திண்ணி கால்வாய் என அழைக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நீச்சல் தெரியாமல் ஆர்வத்துடன் தண்ணீருக்குள் இறங்கி குளிக்கும்போது. இழுத்து செல்லப்படுகின்றனர். விழிப்புணர்வு தந்திருந்தாலும் பலரும் கேட்காமல் இங்கு குளிப்பதால் பலர் உயிரிழக்கும் நிலை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 142 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News January 1, 2026

தஞ்சை மாவட்டத்தில் 1,566 பேர் மீது 1,173 வழக்குகள் பதிவு

image

தஞ்சை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான குற்றம் செய்ததாக 1,566 பேர் மீது 1,173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 260 லிட்டர் சாராய ஊறல், 290 லிட்டர் சாராயம், 201 லிட்டர், 5,610 லிட்டர் மது மற்றும் 762 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மணல் கடத்தியதாக 775 பேர் கைது செய்யப்பட்டு 702 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!