News September 23, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (செப்.22) இரவு 10 மணி முதல் இன்று(செப்.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காலவர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 22, 2025

தஞ்சாவூர் மக்களே உஷார்; வெளுக்க போகும் மழை

image

தஞ்சாவூர் மக்களே இன்று (செப்.22) இரவு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மேலும், இன்று இரவு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடை முக்கியம் மக்களே.!

News September 22, 2025

தஞ்சை: நவராத்திரியில் செல்ல வேண்டிய கோவில்கள்!

image

கண்டியூர் கிழக்கே உள்ள திருவேதிக்குடியில் பிரசித்தி பெற்ற வேதபுரீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இங்கு அம்மன் வலது புறமும் சிவன் இடது புறமும் இணைந்துள்ள அர்த்தநாரீசுவரரைக் காணலாம். கூடுதலாக இங்குள்ள மூலவரை நவராத்திரி தினத்தன்று எலுமிச்சை மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்றும், திருமண வரன், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!

News September 22, 2025

தஞ்சை: 810 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

image

தஞ்சாவூர் விளார் சாலையில், தஞ்சாவூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணிகள் ஏற்றிச் செல்லும் வேனில் 810 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை கடத்திய குமரன், நிஜாத்ஜாபர், பாலாஜி 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த 810 கிலோ ரேஷன் பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!