News June 26, 2024

தஞ்சாவூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு அளித்த நிறுவனம், சிறந்த சமூகப் பணியாளர் ஆகியவற்றிற்கு (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வரால் விருது வழங்கப்பட உள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் விருது பெற http://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூலை 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News March 1, 2026

தஞ்சை பெரிய கோயில் நடை மூடல்

image

தஞ்சை பெரிய கோயிலின் நடை வரும் 3ம் தேதி அன்று சந்திர கிரகணத்தை காலை 9 மணி முதல் இரவு 7:30 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, 7.30 மணிக்கு பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களின் வழிபாட்டிற்காக நடை திறக்கப்படும் என்று தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News March 1, 2026

தஞ்சை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

தஞ்சை: +2 பொதுத்தேர்வில் பங்கேற்க உள்ள 26,854 மாணவர்கள்

image

தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 2) தொடங்கப்படவுள்ள +2 பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 854 போ் பங்கேற்று எழுதுகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் +2 பொதுத் தேர்வுக்காக 111 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. +2 பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!