News February 22, 2026

தஞ்சாவூர்: அரசு பேருந்து மோதி 2 இளைஞர்கள் பலி – சோகம்

image

பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ்(24) மற்றும் அவரது நண்பர் வெங்கடேசன்(24) ஆகிய இருவரும் பைக்கில் திருச்செந்தூர் சென்று விட்டு, மீண்டும் ஊர் திரும்பி உள்ளனர். அப்போது அம்மணிசத்திரம் அருகே வந்த போது பைக் மீது அரசு பேருந்து மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 22, 2026

தஞ்சை விவசாயிகளுக்கு ரூ.7.96 கோடி வரவு வைப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 9,833 ஏக்கர் நெற்பயிர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், முதற்கட்டமாக 5295 விவசாயிகளுக்கு ரூ.7.96 கோடி நேரடியாக வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

News February 22, 2026

தஞ்சை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தஞ்சை மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News February 22, 2026

தஞ்சாவூர்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

image

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <>இ-பெட்டகம் என்ற <<>>செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!