News May 10, 2024

தஞ்சாவூர்: அரசு பள்ளிகளில் 90.87% தேர்ச்சி

image

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தஞ்சாவூர் 93.40% சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் 90.87% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 6,019 பேர் தேர்வு எழுதி 5,261 தேர்ச்சி; 6,380 மாணவிகள் தேர்வு எழுதி 6,006 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தம் 12,399 பேர்‌ தேர்வு எழுதி 11,267 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News February 16, 2026

தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் அதன் நகர்ப்புற பகுதிகளான கீழவாசல், வண்டிக்கார தெரு மற்றும் பழைய பேருந்து நிலையம் போன்ற நகரங்களின் முக்கியமான பகுதிகளில் நாளை (பிப்.17) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அப்பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என்று மின்வாரியம் சார்பாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 16, 2026

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் 17.02.2026-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள் அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் இந்த முகாமில் ஒன்று முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.” என்று அறிவித்துள்ளார்.

News February 16, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு 10 முதல், இன்று (பிப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!