News September 8, 2025
தஞ்சாவூரில் வெளுத்து வாங்கிய மழை

தஞ்சாவூர்: வானிலை ஆய்வு மையம் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்திருந்தது. அதன் படி நேற்று இரவு தஞ்சை மற்றும் அதன் மாவட்டத்தில் பிற இடங்களான திருவையாறு, பூதலூர், பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, போன்ற பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. மழையால் தற்போது அறுவடை பணிகளை ஆரம்பித்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News September 8, 2025
தஞ்சை: நீதிமன்றத்தில் பரபரப்பான தீர்ப்பு

செப் 8, 2025 கும்பகோணம் மாங்குடி அருகே நடந்த கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் முக்கிய குற்றவாளியான பெண் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர் மீனா மற்றும் நீதிமன்ற காவலர் சரோஜினி உதவி காவல் கண்காணிப்பாளர் மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டினர்.
News September 8, 2025
தஞ்சாவூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தஞ்சை மக்களே இதற்கு விண்ணபிக்க அதிகாரப்பூர்வ <
News September 8, 2025
தஞ்சாவூர்: ஓட ஓட வெட்டி படுகொலை

பேராவூரணி பாஜக ஒன்றிய தலைவர் ராஜேஷ் குமார் என்பவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் 15 லட்சம் கடன் தொகை பெற்றுள்ளார். தலைமறைவான சக்திவேலின் தம்பி பிரவீன் குமார் நேற்று நள்ளிரவு ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வாட்டாத்தி கோட்டைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்துவிட்டு ராஜேஷ் குமார் காவல்நிலத்தில் சரணடைந்தார்.