News January 2, 2026
தஞ்சாவூரில் மின்தடை அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், திருப்பனந்தல், திருப்புறம்பியம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.03) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே அத்துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 5, 2026
தஞ்சை: ஒரே நாளில் 15 டன் கடல் மீன்கள் விற்பனை

தஞ்சை மாவட்டத்திலேயே கும்பகோணம் மீன் மார்க்கெட் முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு சாதாரண நாட்களில் 5 டன் மீன்களும், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் 20 டன் வரை மீன்களும் விற்பது வழக்கம். இந்நிலையில், தமிழகம் மற்றும் கேரள கடலோரப் பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் 15 டன் கடல் மீன்கள் கொண்டுவரப்பட்டு ஒரே நாளில் வேகமாக விற்பனை செய்யப்பட்டது.
News January 5, 2026
தஞ்சை: கோயில் வாசலில் கிடந்த சடலம்

தஞ்சாவூர் மாவட்டம், மாறனேரி திரௌபதி அம்மன் கோயில் வாசலில் இறந்த நிலையில் கிடந்த முதியவரின் சடலத்தை பூதலூர் போலீசார் மீட்டனர். கிராம நிர்வாக அலுவலரின் புகாரைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயராமன் என அடையாளம் காணப்பட்டது. இதுகுறித்து பூதலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 5, 2026
தஞ்சை: நாளை இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி, பூண்டி, அய்யம்பேட்டை, தஞ்சாவூர் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (ஜன.6) மின்தடை செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக திருப்பனந்தாள், சாலியமங்கலம், அய்யம்பேட்டை, மேலட்டூர், மருத்துவக் கல்லூரி, ரகுமான் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


