News December 6, 2024
தங்க நகை தொழிற்பூங்கா அமைக்க டெண்டர்

கோவையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகை பட்டறைகள் உள்ளன. இதனால் கோவையில் தங்க நகை பூங்கா வேண்டும் என்ற சில கோரிக்கைகளை தங்க நகை தொழிலாளர்கள் அண்மையில் முதல்வரிடம் தெரிவித்தனர். அவரும் உறுதியளித்தார். இந்நிலையில் சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.126 கோடியில் 3.41 ஏக்கரில் தங்க நகை தொழிற்பூங்கா அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
Similar News
News August 9, 2025
கோவை மாவட்டத்தில் ஆக.11 ல் குடற்புழு நீக்க முகாம்

கோவை மாவட்ட நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசின் இரண்டாம் சுற்று குடற்புழு நீக்க முகாம் வரும் ஆக.11 ல் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்கு உள்பட்ட 9,55,919 பேருக்கும், 20 முதல் 30 வயது உள்ள 2,66,963 பெண்கள் என மொத்தம்12,22,882 பயனாளிகள் பயனடையவுள்ளனா். விடுபட்டவா்களுக்கு ஆக.18 அன்று வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 9, 2025
கோவை: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

கோவை மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <
News August 9, 2025
கோவை: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

கோவை மக்களே, IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக 475 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ITI, Diploma, Degree படித்திருந்தால் போதுமானது. பணிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் <