News April 8, 2025
தங்க நகையை பத்திரமாக ஒப்படைத்த சிறுமிகள்

திருத்தணி முருகன் கோயிலில், நேற்று (ஏப்ரல் 7) திரளான பக்தர்கள் வருகை தந்தனர். கோயில் பார்க்கிங் பகுதியில் ரூ.1,50,000 மதிப்புள்ள தங்க காப்பு ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்த சிறுமிகள் பத்திரமாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, நகையை தவறவிட்ட பக்தர் போலீசாரிடம் வந்து புகார் அளிக்க வந்தபோது, போலீசார் அந்த நகைகளை ஒப்படைத்து சிறுமிகளை பாராட்டி வாழ்த்தினர். ஷேர் பண்ணுங்க
Similar News
News September 16, 2025
திருவள்ளூர்: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News September 16, 2025
திருத்தணி முருகன் கோயில் ரூ.1.47 கோடி உண்டியல் வசூல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் 26 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் ரூ.1.47 கோடி செலுத்தி இருந்ததாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணி நிறைவில் ரூ.1.43 கோடி, திருப்பணி உண்டியல் காணிக்கை ரூ.4.44 லட்சம் என மொத்தம் 1 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரத்து 49 ரூ.ரொக்கம், 732gm தங்கம்,16,330gm வெள்ளி என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
News September 16, 2025
திருவள்ளூரில் ரூ.98 கோடி வீண்!

திருவள்ளூர் மாவட்டத்தில், 10 – 25 ஆண்டுகளுக்குள் அரசு நிதியில் கட்டப்பட்ட 1,181 கட்டடங்கள் சேதமடைந்து உள்ளன. இந்த கட்டடங்களை மக்கள் பயன்படுத்தாததால், அரசு நிதி, 98 கோடி ரூபாய்க்கும் மேல் வீணாகியுள்ளது என குற்றசாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, கிராம சேவை மையம், மகளிர் சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், பயணியர் நிழற்குடை என, கடந்த 10 – 25 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட 1,181 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.