News April 10, 2025

தங்க தாலி போலவே மஞ்சள் தாலி

image

கோவையில் பொற்கொல்லர் ஒருவர் விரலி மஞ்சளை தங்க தாலி போலவே வடிவமைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவையை சேர்ந்தவர் ராஜா. இவர் விரலி மஞ்சலை பயன்படுத்தி தங்க தாலியை போன்றே வடிவமைத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது. 

Similar News

News April 18, 2025

மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை!

image

மருதமலை முருகன் கோயிலில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் அறுங்கோண வடிவத்தில் அமைக்கப்படவுள்ளது. மேலும் புல்வெளி நில அமைவிற்கு மத்தியில், புதிதாக 184 அடிஉயர முருகன் சிலையும் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். அவ்வாறு அமையப்பெற்றால் உலகில் மிகப்பெரிய முருகன் சிலை மருதமலையில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 18, 2025

கோவை: மகனை வெட்டி கொன்ற தந்தை கைது

image

கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (57). இவர் மகன் விஜயகுமார் (27). மதுப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார், மது அருந்தி விட்டு வந்து அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவும் விஜயகுமார் மதுபோதையில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன், அரிவாளால் கழுத்தில் வெட்டியதில், விஜயகுமார் பலியானார். பின்னர் போலீசார் விஸ்வநாதனை கைது செய்தனர்.

News April 17, 2025

கோவை; பகிரங்க அழைப்பு விடுத்த பெண் புரோக்கர் சிக்கினார்!

image

கோவை வீரகேரளத்தை சேர்ந்த 34 வயதான இளைஞர், சீரநாயக்கன்பாளையத்தில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர் தன்னிடம் அழகான பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், பணம் எடுப்பதாக கூறி விட்டு, ஆர்.எஸ்.புரம் போலீசில் புகாரளித்தார். அங்கு சென்ற போலீசார் கரூரை சேர்ந்த லட்சுமி என்ற பெண் புரோக்கரை கைது செய்து இரு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!