News April 11, 2025
தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் நகர் மையப் பகுதியில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, பங்குனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (11.04.2025) அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்க கவச சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News April 18, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (18/04/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்சுமணதாஸ் (9443286911), ராசிபுரம் – துர்க்கைசாமி (9498183251), திருச்செங்கோடு – சிவக்குமார் (9498176695) ,வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
News April 18, 2025
ஆயுள் பலம் தரும் ராசிபுரம் கோயில்!

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள். திருமண தடை, தம்பதிக்கு இடையே பிரச்னைகள் நீங்க, வாழ்க்கை துணைவருக்கு ஆயுள் பலம் நீடிக்க, குடும்பத்துடன் ஒருமுறை நித்ய சுமங்கலி மாரியம்மனை தரிசித்து வழிபட்டால், நீங்கள் கேட்ட வரம் கிடைக்கும், விரும்பியது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!
News April 18, 2025
நாமக்கல்: கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (18-04-2025) வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) ரூ.86-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.85-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் முட்டை விலையை பொறுத்தவரையில், ரூ.4.15 ஆக நீடித்து வருகிறது. கடந்த பத்து நாட்களாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நீடித்து வருகிறது.