News July 26, 2024
தங்கம் வெல்ல காத்திருக்கும் இளவேனில் வாலறிவன்

தமிழகத்தில் கடலூரில் 1999ம் ஆண்டு பிறந்தவர் இளவேனில் வாலறிவன். இவர் பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர்ரைஃபிள் பிரிவில் இடம்பெற்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ந்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்த நிலையில், இம்முறை பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் விளையாடுகிறார். இவர் 2022 ISSF உலக துப்பாக்கி சுடுதலில் சாம்பியன்ஷிப் வெண்கலப்பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.
Similar News
News August 20, 2025
கடலூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460324>>தொடர்ச்சி<<>>
News August 20, 2025
கடலூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

▶️ இத்திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News August 20, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இன்று (ஆக.19) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.