News December 14, 2024
தங்கம் வென்ற மாணவியை பாராட்டினார் அமைச்சர்

விழுப்புரம் அடுத்த வி.சாலை அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. காது மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறன் மாணவியான இவர், கோலாலம்பூரில் கடந்த 5ஆம் தேதி தொடங்கிய 10ஆவது சர்வதேச ஆசிய பசுபிக் காதுகேளாதோருக்கான தடகள போட்டியில் 1,600 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும் வென்றார். வெற்றி பெற்ற மாணவியை அமைச்சர் பொன்முடி நேரில் அழைத்து பாராட்டினார்.
Similar News
News March 7, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று மார்ச்-(06) இரவு 10 மணி முதல் மார்ச்- (07)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறந்த ஆட்சியர்

விழுப்புரம் நகராட்சி சாலமேடு பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இன்று (மார்ச்.06) திறக்கப்பட்டது. இந்த விழாவில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான்,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சுமணன் முன்னிலையில் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு பங்கேற்றனர்.