News August 7, 2024

தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவி

image

அண்ணா நகரைச் சேர்ந்த நட்சத்திரா என்ற மாணவி, கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், டேக்வாண்டோ போட்டிகளில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று வீடு நேற்று திரும்பினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் புவனேஸ்வரி பெருமாள், அவரது இல்லத்தில் தங்க மங்கை நட்சத்திராவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

Similar News

News October 18, 2025

கள்ளக்குறிச்சி: மக்களே ரயில்வேயில் வேலை ரெடி!

image

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பதவிகளுக்கு ஏற்ப தகுதிகள் மாறுபடும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,000-ரூ 29,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள் <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 18, 2025

கள்ளக்குறிச்சி: மாவட்ட இளைஞர்களுக்கு நற்செய்தி!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் பல்வேறு வகையான தொழில்முனைவோர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, 30 நாட்கள் வயரிங் பயிற்சி, 30 நாள் பைக் பழுது நீக்குதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கட்டாயம் 8ம் வகுப்பு தேர்ச்சியும், எழுத, படிக்க தெரிந்து இருக்க வேண்டும். கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஆட்சியர் தகவல்.

News October 18, 2025

கள்ளக்குறிச்சி : சிலிண்டர் காஸ் கசிந்து தீ விபத்தில் ஒருவர் பலி

image

ஈரியூரை சேர்ந்தவர் பொன்னுசாமி இவரது மனைவி அனுசுயா இருவரும் மகன் பிரகாஷுடன் வசித்தனர். கடந்த 13ம் தேதி பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவரது மாமனார் வீடான கண்டாச்சிமங்கலம் சென்றிருந்தார். காஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பொன்னுசாமி, அனுசுயா இருவரும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் பொன்னுசாமி நேற்று அக்.18 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!