News February 24, 2026
தங்கம் விலை மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்வு!

சென்னையில் தங்கம் விலை இன்று(பிப்.24) 22 கேரட் கிராமுக்கு ₹30 உயர்ந்து ₹14,890-க்கு விற்பனையாகிறது. இதனால், ஒரு சவரன் ₹1,19,120 என மீண்டும் ₹1,20,000-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இம்மாத(பிப்.) தொடக்கத்தில் சரிவைக் கண்ட தங்கம் விலையானது மாதத்தின் இறுதியில் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,760 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 26, 2026
2026 தேர்தலில் இருந்து துரைமுருகன் விலகலா?

வயதுமூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் (87) சமீபத்தில் நடைபெற்ற பேரவை கூட்டத்தொடரில்கூட பங்கேற்கவில்லை. இந்நிலையில், அவர் 2026 தேர்தலில் போட்டியிடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அவரது மகனும் MP-யாக இருப்பதால், புதிதாக இளைஞர்களுக்கு அங்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. விலகல் முடிவை துரைமுருகன் எடுத்தால், அது சரியானதா? உங்கள் கருத்து என்ன?
News February 26, 2026
அதிமுகவில் இணைந்தார்.. பிரேமலதா தரப்பு அதிர்ச்சி!

தேமுதிக திருவாரூர் மாவட்ட EX செயலாளர் மகா முத்துக்குமார் சற்றுமுன், EX அமைச்சர் காமராஜ் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவரது தலைமையில், தேமுதிக அதிருப்தி நிர்வாகிகள் பலர் அதிமுகவில் விரைவில் இணைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே விருதுநகர், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் தேமுதிகவிலிருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்தது பிரேமலதா தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
News February 26, 2026
இந்தியா – இஸ்ரேல் இடையே புதிய ஒப்பந்தங்கள்!

இந்தியா – இஸ்ரேல் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. *பாதுகாப்பு ஒத்துழைப்பு, *இருதரப்பு முதலீடு, *இந்தியாவிலிருந்து முத்துக்கள், தாதுப் பொருள்கள், ரசாயனப் பொருள்கள் ஏற்றுமதி ஆகியவை அதில் இடம் பெறவுள்ளன. ஆசியக் கண்டத்தில் இந்தியாவின் 2-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ள இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடாகவும் இருப்பதால் வர்த்தக வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என அரசு கூறியுள்ளது.


