News February 27, 2026
தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று (பிப்.27) மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இதன்படி, 1 அவுன்ஸ்(28g) $30.10 (இந்திய மதிப்பில் ₹2,739) குறைந்து $5,176.16-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் தங்கம் விலை இன்று குறைய வாய்ப்புள்ளது. அதேநேரம், சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் ஒரு அவுன்ஸ், $2.59 குறைந்து $88.41 ஆக உள்ளது.
Similar News
News February 28, 2026
விஜய்க்கு இந்த நடிகையுடன் தொடர்பா? பரவியது

விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு உள்ளதாக கூறி, அவரது மனைவி சங்கீதா விவகாரத்து கோரியுள்ளார். இந்நிலையில், தொடர்பில் இருப்பதாக கூறப்படும் நடிகை, த்ரிஷா தான் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதனால் #Trisha ஹேஷ்டேக் X-ல் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக ஏதும் தகவல் இல்லை. அதேநேரம், வழக்கில் தேவைப்பட்டால் நடிகையின் பெயரை கோர்ட்டில் வெளியிடுவேன் என சங்கீதா கூறியிருந்தார்.
News February 28, 2026
வரும் 4-ம் தேதி தஞ்சை செல்கிறார் விஜய்

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை விஜய் சந்தித்து வருகிறார். அந்த வகையில், வரும் மார்ச் 4-ம் தேதி தஞ்சையில் தவெக நிர்வாகிகளை விஜய் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி கோரி, இன்னும் சற்றுநேரத்தில் தவெக மனு அளிக்கவுள்ளது. மனைவி சங்கீதாவின் பரபரப்பு குற்றச்சாட்டுக்கு மத்தியில், விஜய் தீவிர அரசியல் பயணத்தை தொடர்கிறார்.
News February 28, 2026
விஜய்யும் ஒவ்வொரு மாதத்தின் 27-ம் தேதி!

கடந்த சில மாதங்களின் 27-ம் தேதி விஜய்க்கு முக்கியமான நாள்களாக மாறியுள்ளது *செப். 27: கரூர் சம்பவம் *அக். 27: கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்தித்தார் *நவ. 27: செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார் *டிச. 27: ‘ஜன நாயகன்’ பட ஆடியோ லாஞ்ச் *ஜன. 27: ‘ஜன நாயகன்’ விவகாரம் விசாரணைக்கு வந்தது *பிப். 27: விவாகரத்து. அடுத்து வரவுள்ள 27-ம் தேதிகள் என்ன சம்பவங்களை செய்யவுள்ளதோ?


