News January 5, 2026

தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்றும் கடுமையாக உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $72 அதிகரித்து $4,391.58-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் சாமானிய மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். வெள்ளி விலையும் அவுன்ஸ் $3.51 அதிகரித்துள்ளது. இதனால், இன்று இந்திய சந்தையிலும் தங்கம் விலையில் (சவரன் ₹1,00,800) பெரும் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News January 24, 2026

சாய் பல்லவியை பாராட்டிய ஆமிர் கான்

image

சாய் பல்லவி தற்போது இந்தியில் 2 படங்களில் நடித்துள்ளார். ஆமிர் கான் மகன் ஜூனைத் கானின் ஜோடியாக ‘ஏக் தின்’ என்ற படத்திலும், ‘ராமாயணா’ படத்திலும் நடித்துள்ளார். ‘ஏக் தின்’ படத்தில் அவரே டப்பிங் பேசியிருக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய ஆமிர் கான், சாய் பல்லவி அருமையாக நடித்துள்ளதாகவும், தென்னிந்தியாவின் மிகச் சிறந்த நடிகை என்று சாய் பல்லவியை பாராட்டியுள்ளார்.

News January 24, 2026

ஜனவரி 24: வரலாற்றில் இன்று

image

*1922 – ராஜேஸ்வரி சாட்டர்ஜி, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் பிறந்ததினம். *1939 – சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 28,000 பேர் உயிரிழந்தனர். *1966 – இந்திய இயற்பியலாளர் ஹோமி பாபா மறைந்த நாள். *1984 – இசையமைப்பாளர் டி.இமான் பிறந்தநாள். *இன்று தேசிய பெண் குழந்தை நாள்.

News January 24, 2026

468 நாட்களுக்கு பிறகு சூரியகுமார் அரைசதம்

image

T20 இந்திய அணி கேப்டன் சூரியகுமார், நியூசிலாந்து எதிரான 2-வது T20 போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்கு வகித்தார். இந்த போட்டியில், 23 இன்னிங்ஸ்களுக்கு (468 நாட்கள்) பிறகு அரைசதம் விளாசினார். அதுவும், வெறும் 23 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். T20 உலகக் கோப்பைக்கு பின்னர் அவரது ஃபார்ம் குறித்து எழுந்த கேள்விகளுக்கும், சந்தேகங்களும் நேற்றைய போட்டியில் பதிலளித்தார்.

error: Content is protected !!