News December 11, 2025
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $30.63 உயர்ந்து, $4,237.81-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகிறது. நேற்று (டிச.10) சவரன் ₹96,240-க்கு விற்பனையானது.
Similar News
News March 30, 2026
ரேஷன் கார்டுக்கு மண்ணெண்ணெய் விநியோகம்

நாடு முழுவதும் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு 60 நாள் சிறப்பு திட்டத்தை கையிலெடுத்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக மண்ணெண்ணெய் விநியோகிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் நிலவும் எரிசக்தி சவால்களை சீராக்க தற்காலிக நிவாரணமாக இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 30, 2026
அமமுகவுக்கு குக்கர் சின்னம்… ECI அறிவித்தது

NDA-வில் 11 தொகுதிகளில் போட்டியிடும் அமமுக தனிச் சின்னத்தில் களம் காணும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த முறை போட்டியிட்ட குக்கர் சின்னத்தை மீண்டும் ஒதுக்க. ECI-யிடம் அக்கட்சி கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில், அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக ECI அறிவித்துள்ளது.
News March 30, 2026
ஸ்நாக்ஸ் வாங்கும்போது இதை கவனிங்க!

குழந்தைகளுக்கோ பெரியவர்களுக்கோ, ஸ்நாக்ஸ் வாங்கும்போது பளபளப்பான பாக்கெட்டை மட்டும் பார்க்காதீர்கள், அதன் லேபிளையும் படியுங்கள் என FSSAI எச்சரித்துள்ளது. குறிப்பாக, அதில் உள்ள பொருள்களின் தகவல், FSSAI உரிம எண், காலாவதி தேதி, ஊட்டச்சத்து மதிப்புகள், சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பின் அளவு ஆகியவற்றை கவனிக்க வேண்டும்; ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம் என்பதை அறிவுறுத்தியுள்ளது.


