News January 20, 2026

தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை இன்றும் தாறுமாறாக அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $65.14 உயர்ந்து $4,661.41-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $3.06 உயர்ந்து $93.19 ஆக உள்ளது. இதனால், இன்று (ஜன.20) இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 7, 2026

Flight-ல் கோடிகளை கொண்டு வரும் அமித்ஷா: வைகோ

image

PM மோடி, அமித்ஷா பிரசார வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிடுவார்களா என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலின் காரை 24 மணி நேரத்திற்குள் 2-வது முறை சோதனை செய்யப்படுவதாக கூறிய அவர், அமித்ஷா விமானத்தில் வரும்போது எத்தனை கோடிகளை கொண்டு வருகிறார் என யாருக்காவது தெரியுமா என குற்றஞ்சாட்டினார். அமித்ஷா கொடுக்கும் தைரியத்தில் தான் ஸ்டாலின் காரை மட்டும் EC சோதனையிடுவதாகவும் சாடியுள்ளார்.

News April 7, 2026

₹18,000 சம்பளம்… டிகிரி, டிப்ளமோ போதும்

image

ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலையில் 450 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியர், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு டிப்ளமோ / டிகிரி முடித்திருக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஸ்டைபண்டாக மாதம் ₹18,000 வழங்கப்படும். இதற்கு இந்த <>லிங்க்கில்<<>> ஏப்.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

News April 7, 2026

கோமாவில் ஈரான் உச்ச தலைவர்

image

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், அவர் பொதுவெளியில் தோன்றவோ, உரையாற்றவோ இல்லை. இந்நிலையில், அயதுல்லா அலி கொல்லப்பட்ட அதே தாக்குதல்களில் காயமடைந்த மொஜ்தபா, சுயநினைவின்றி கோம் நகரில் உள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நாட்டை நிர்வகிக்கும் எந்த முடிவையும் அவரால் எடுக்க முடியவில்லையாம்.

error: Content is protected !!