News January 23, 2026

தங்கம் விலை தலைகீழாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று அதிக அளவு உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $118.55 உயர்ந்து $4,953.03-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $4.04 உயர்ந்து $96.84 ஆக உள்ளது. இதனால், இந்திய சந்தையில் நேற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை இன்று (ஜன.23) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News February 2, 2026

தேர்தல் அறிக்கையில் இதை அறிவிக்கிறாரா EPS?

image

தேர்தல் அறிக்கை தயாரிக்க TN மக்களிடம் கருத்து கேட்டுள்ளார் EPS. அப்போது, டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெரும்பாலான பெண்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் வாக்குறுதியில் மதுவிலக்கை அறிவிப்பது குறித்து EPS மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2016 தேர்தலில் பூரண மதுவிலக்கு வாக்குறுதியை கொடுத்த திமுகவுக்கு அதுவே நெகடிவ்வாக முடிந்தது. இதனால் EPS குழப்பத்தில் இருக்கிறார் என்கின்றனர்.

News February 2, 2026

இம்மாதம் திமுகவை குறிவைத்து 3 ரெய்டுகள்?

image

திமுக தலைவர்கள் மீது இம்மாதம் 2 – 3 ரெய்டுகள் நடத்தப்பட இருப்பதாக ஆ.ராசா ஆருடம் தெரிவித்துள்ளார். அப்படி எந்த ரெய்டு வந்தாலும் திமுக கொடுக்கும் ரெய்டுகளுக்கு அமித்ஷாவும், மோடியும் விரைவில் காணாமல் போவார்கள் என்றார். வரும் தேர்தலில் திமுக வெற்றிபெற்றால், 2027-ல் டெல்லியில் ஆட்சிமாற்றம் நடக்கும் எனவும், புதிய ஆட்சியில் திமுக பங்கெடுக்கும் என்றும் அவர் கூறினார்.

News February 2, 2026

சீமான் பின்வாங்குகிறாரா?

image

ஏற்கெனவே 100 தொகுதிகளுக்கும் மேல் வேட்பாளர்களை அறிவித்த சீமான், அவர்களை பிப்.21-ல் திருச்சி மாநாட்டில்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார் என கூறப்பட்டது. இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்த இந்த தொகுதிகளில் மாற்றம் இருப்பதாக தகவல் அறிந்தவர்கள் சொல்கின்றனர். நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகள்கூட மாறவிருக்கிறதாம். இதனால் சீமான் ஏன் திடீரென பின்வாங்குகிறார் என அரசியல் விமர்சகர்கள் கேட்கின்றனர்.

error: Content is protected !!