News November 13, 2025

தங்கம் விலை ஒரேநாளில் தடாலடியாக மாறியது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மட்டும் ₹2,400 அதிகரித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, காலையில் சவரனுக்கு ₹1,600 அதிகரித்த நிலையில், மதியம் மேலும் ₹800 உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,900-க்கும், 1 சவரன் ₹95,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 13, 2025

ரிலீசுக்கு முன்பே ₹325 கோடி ஈட்டிய ‘ஜனநாயகன்’

image

ரிலீசுக்கு முன்பே விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ கோடிகளை குவித்து வருகிறது. தமிழக திரையரங்க உரிமை ₹100 கோடிக்கும், வெளிநாட்டு உரிமைகள் ₹80 கோடிக்கும், ஆடியோ உரிமை ₹35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன. மேலும் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ₹110 கோடிக்கு வாங்கியுள்ளது. இதுவரை படத்தின் மொத்த வருவாய் ₹325 கோடியை தாண்டியுள்ளது. பொங்கல் வின்னராக மாறுவாரா ‘ஜனநாயகன்’..?

News November 13, 2025

விஜயகாந்த் வீட்டில் போலீஸ் குவிப்பு.. பதற்றம் உருவானது

image

சமீப காலமாக, அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்று, பிரேமலதா விஜயகாந்த் வீட்டுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸ் குவிக்கப்பட்டு அங்கு சோதனை நடைபெற்றது. ஆனால் இது புரளி என்பது சோதனையில் தெரியவந்தது. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், KS ரவிக்குமார், சாக்‌ஷி உள்ளிட்டோர் வீடுகளுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

News November 13, 2025

ONGC-ல் வேலை.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

ONGC-ல் காலியாக உள்ள 2,623 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18- 24 வயதுக்குட்பட்ட 10-வது, 12-வது, ITI, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். Merit List & Certificate Verification மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹8,200- ₹12,300 வரை மாதச்சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். வரும் நவம்பர் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!