News February 14, 2026
தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்

இந்த வார தொடக்கத்தில் தங்கம் விலை உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு ஆட்டம் காண்பித்தது. இருப்பினும், பின்னர் சவரனுக்கு ₹3,120 குறைந்து மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது. ஆனால், இன்று மீண்டும் சவரனுக்கு ₹1,280 உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், சர்வதேச சந்தையில் தற்போது 1 அவுன்ஸ் $114.83 (₹10,398) உயர்ந்துள்ளதால், வரும் நாள்களிலும் தங்கம் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
Similar News
News February 20, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, நாளை (பிப்.21) விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதேபோல், பொன் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டத்திற்கு பிப்.25 அன்று உள்ளூர் விடுமுறையாகும்.
News February 20, 2026
BREAKING: திமுக கூட்டணியில் வெடித்தது மோதல்

புதுச்சேரியில் யார் தலைமையில் கூட்டணி என்பதில் காங்., – திமுக இடையே வெளிப்படையாக மோதல் வெடித்துள்ளது. புதுவை CM வேட்பாளர் திமுகவின் ஜெகத்ரட்சகன் என்று பேச்சு எழுந்த போது, திமுகவுக்கு எதிராக EX CM நாராயணசாமி கொந்தளித்தார். இந்நிலையில், காங்., 18 தொகுதிகளை கேட்டால், நாங்கள் 30 இடங்களையும் கேட்போம் என ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார். மேலும், 2021-ல் திமுக தோல்விக்கு காங்கிரஸும் ஒரு முக்கிய காரணம் என்றார்.
News February 20, 2026
₹10 லட்சமாக உயர்வு.. அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ செலவை திரும்பப் பெறும் உச்சவரம்பை ₹5 லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன்மூலம், அமைச்சகங்கள் இனி ஒருங்கிணைந்த நிதி பிரிவை ஆலோசிக்காமல் நேரடியாக மருத்துவ கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கலாம். இந்த தொகையை பெற டிஸ்சார்ஜ் ஆன 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


