News January 28, 2026

தங்கத்தை விற்கும்போது எச்சரிக்கையாக இருங்கள்!

image

தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவரும் நிலையில், தங்கம் விற்பனைக்கான விதிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தங்க நகைகளை தாமதமாக விற்றால் உங்களின் <<18955748>>வரிச்சுமை<<>> அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், தங்கம் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் 3% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஆனால், பழைய நகைகளை விற்கும்போது, நீங்கள் ஜிஎஸ்டி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. SHARE IT.

Similar News

News February 4, 2026

அதிமுகவுடன் இணைந்தார்.. செந்தில் பாலாஜி அதிர்ச்சி

image

கொங்கு மக்கள் முன்னணி(கொமமு) தலைமை ஒருங்கிணைப்பாளர் C.ஆறுமுகம், EPS-ஐ நேரில் சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மக்கள் முன்னணி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாடுபடும் எனவும் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். கொமமு-வுடன் செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், அக்கட்சி திடீரென அதிமுகவுடன் இணைந்துள்ளது.

News February 4, 2026

ஹிந்தி திணிப்பு முயற்சிகளை கைவிடுக: தங்கம் தென்னரசு

image

சிவகாசி ரயில் நிலைய பெயர்ப்பலகையில், தமிழைப் பின்னுக்கு தள்ளி ஹிந்திக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து X பதிவில், மக்களின் மொழி உணர்வுகளை மதிக்காமல், தெற்கு ரயில்வே மேற்கொள்ளும் இத்தகைய மறைமுக ஹிந்தி திணிப்பு முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தமிழே முன்னவள், மூத்தவள், முதன்மையானவள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News February 4, 2026

பட்ஜெட் பற்றி தவெகவிடம் கேட்கக் கூடாது: KAS

image

தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற விஜய், பட்ஜெட் பற்றி வாய் திறக்காதது சர்ச்சையானது. இந்நிலையில் அதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பட்ஜெட் பற்றி தவெகவின் கருத்தை நீங்கள் கேட்கக் கூடாது; புது இயக்கமான தவெக, TN-ல் ஆட்சியை பிடிக்க வேண்டியுள்ளதால், அதன்பின்தான் அதுகுறித்து கருத்து கூற முடியும் என தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

error: Content is protected !!