News August 18, 2025
தங்ககவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சிநேயர்!

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சிநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தங்ககவச சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News August 21, 2025
நாமக்கல்: விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்

விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு மைசூர், மாண்டியா, கெங்கேரி, பெங்களூரூ, கிருஷ்ணராஜபுரம் போன்ற பகுதிகளில் இருந்து நாமக்கல் வந்து செல்லவும், நாமக்கல்லில் இருந்து மதுரை, விருதுநகர், சாத்தூர், திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு சென்று திரும்பவும் 06241/06242 மைசூர் – திருநெல்வேலி – மைசூர் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. நாமக்கல் மக்களே முன் பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள் .
News August 21, 2025
5 லட்சம் அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், அரசு சார்பில் பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு ₹5 லட்சம் சிறப்புப் பரிசு மற்றும் ₹7,000 மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும். மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள, தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம், என நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி அறிவித்துள்ளார். SHAREIT
News August 21, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து வெள்ளிக்கிழமை 22/8/2025 காலை 6:15 மணிக்கு பெங்களூரூ, ஹூப்ளி, பெலகாவி, மிரஜ், கல்யாண், புனே, சூரத், வதோதரா, அகமதாபாத், அபூ ரோடு, ஜோத்பூர், பிகானீர், சூரத்கர், ஶ்ரீ கங்கா நகர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 22498 திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சஃபார் ரயில் ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.