News January 8, 2025

தக்காளி நாற்றங்கன்றுகளை வழங்கிய கலெக்டர்

image

பெண்ணேஸ்வரமடம் கிராமத்தில், நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் தோட்டக்கலைத்துறை சார்பாக பயனாளிகளுக்கு தக்காளி நாற்றங்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு (08.01.2025) இன்று வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News February 5, 2026

கிருஷ்ணகிரி: ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!

image

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே உன்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேற்று (பிப்.4) இரவு 8.20 மணிக்கு ரோஜா (19) என்ற பெண்ணுக்கு பிரசவவலி ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக வந்துள்ளார். பின் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண்ணுக்கு வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News February 5, 2026

கிருஷ்ணகிரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

கிருஷ்ணகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பது தெரியும். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். ஷேர் பண்ணுங்க.

News February 5, 2026

கிருஷ்ணகிரியில் உதவியவருக்கு அடி உதை!

image

மிட்டப்பள்ளியை சேர்ந்த பலராமன் என்பவர் நேற்று (பிப்.3) மாலை ஊத்தங்கரை சாலையில் மது போதையில் விழுந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஜலபதி பலராமனை சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த பலராமனனின் மகன்கள் திலிப் (21), தீபன் (23), அஜித் (25) ஆகியோர் ஜலபதியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!