News April 29, 2024
தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

அரியலூர் தேளூர் GKM நகர் பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடப்பதாக அவ்வழியாகச் சென்றவர்கள் நேற்று காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் ஏதேனும் தகவல் தெரிந்தால் 9498100709 & 9898102217 இந்த எண்ணில் புகார் அளிக்கலாம் என கயர்லாபாத் போலீசார் தரப்பில் நேற்று இரவு தகவல் தரப்பட்டுள்ளது.
Similar News
News August 21, 2025
அரியலூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News August 21, 2025
அரியலூர்: இலவச காதொலிக் கருவி வழங்கல்

தமிழக அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் இலவச காது கேட்கும் கருவிகளை பெறலாம். கடந்த 3 வருடங்களுக்குள் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற்றவர்கள் ஆதார், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த முகாம் அரியலூர் மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
News August 21, 2025
அரியலூர் மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவிப்பு

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், பாப்பாக்குடி, அய்யூர், பெரியகருக்கை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.,22) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆண்டிமடம், விளந்தை, கூவத்தூர், மேலநெடுவாய், பட்டினங்குறிச்சி, காட்டாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!