News December 31, 2024
ட்ரோன் டெக்னீஷியன் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ., முதல்வர் அழகானந்தன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற் பயிற்சி நிலையத்தில், 6 மாத கால புதிய தொழிற் பயிற்சி பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த சேர்க்கைக்கானவிண்ணப்பங்கள்,நேற்று, முதல் மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ.,யில் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்வழங்க வரும் 2ம் தேதி, கடைசி நாளாகும்
Similar News
News October 30, 2025
காரைக்காலில் அரசு சார்பில் கலை நிகழ்ச்சி ஏற்பாடு

புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறையின் சார்பாக 01-11-2025 அன்று மாலை 6 மணிக்கு காரைக்கால் அம்மையார் கலையரங்கத்தில், கிராமிய கலை நிகழ்ச்சியும், பரத நாட்டிய நிகழ்ச்சியும், இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதில் புதுச்சேரி அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டுக்களித்து சிறப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News October 30, 2025
புதுவை: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

புதுவை மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் <
News October 30, 2025
புதுவையில் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் பண மோசடி

புதுவையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் மொத்தமாக ரூ.12.54 லட்சம் பணத்தை ஆன்லைனில் செலுத்தி ஏமாற்றப்படுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதன்படி பாகூரில் ஒருவர் ரூ.11 லட்சத்து 91 ஆயிரத்து 300-ம், தட்டாஞ்சாவடியில் ஒருவர் ரூ.49 ஆயிரமும், வெங்கட்டா நகரில் ஒருவர் ரூ.10 ஆயிரமும், கதிர்காமத்தில் ஒருவர் ரூ.3600-ம் என ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறனர்.


