News February 22, 2026

ட்ரெயின் ட்ராக்கில் இத கவனிச்சிருக்கீங்களா?

image

டெய்லி நாம் ட்ரெயினில் பயணிக்கும் போது, W/L குறியீடை பார்க்காமல் இறங்க மாட்டோம். இதன் அர்த்தம் தெரியுமா? W/L என்பது, லெவல் கிராசிங்கிற்கான விசில் குறியீடாகும். இது, லெவல் கிராசிங்கிற்கு முன்பு வைக்கப்படும் பலகை. W என்பது விசிலை குறிக்கும். L என்பது லெவல் கிராசிங் என்பதைக் குறிக்கும். லோகோ பைலட் இந்த போர்டில் இருந்து லெவல் கிராசிங்கை கடக்கும் வரை விசிலை ஒலிக்க வேண்டும். SHARE IT.

Similar News

News February 24, 2026

தேர்தலுக்கு பின் அதிமுக சசிகலா வசமாகும்: திவாகரன்

image

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பசும்பொன்னில், சசிகலா தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டம் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை சசிகலா வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பசும்பொன்னில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவின் சகோதரர் திவாகரன், புது கட்சி தேர்தலை சந்திக்கும் என்றும், தேர்தலுக்கு பின்னர் சசிகலா வசம் அதிமுக செல்லும் என கூறியுள்ளார்.

News February 24, 2026

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

<<19212209>>தருமபுரி<<>> மாவட்டம் பாலக்கோடு வட்டத்திற்கு நாளை (பிப்.25) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அய்யா வைகுண்டசாமியின் அவதார திருவிழாவையொட்டி, மார்ச் 4-ம் தேதி தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இதனை ஈடுசெய்ய மார்ச் 7 சனிக்கிழமையன்று வேலைநாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News February 24, 2026

விஜய் மீது பழிச்சொல்லை உருவாக்க திமுக முயற்சி: தவெக

image

MGR & ஜெ.வுக்கு பிறகு விஜய்யை பார்த்து தான் திமுக இவ்வளவு பயப்படுகிறது என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். வில்லிவாக்கத்தில் பேசிய அவர், விஜய் மீது இன்னொரு பழிச்சொல்லை உருவாக்க திமுக முயற்சி செய்து வருகிறது; அதனால்தான் போலீசாரின் அனுமதி பெற்று மக்களை விஜய் சந்தித்து வருகிறார் என கூறியுள்ளார். உரிய பாதுகாப்பு கொடுக்காமல், விஜய் வீட்டை விட்டு வெளிவரவில்லை என திமுக அவதூறு பரப்புவதாகவும் பேசியுள்ளார்.

error: Content is protected !!