News January 9, 2026
டைஃபாய்டு காய்ச்சலால் ஆண்டுக்கு 8,000 பேர் மரணம்

இந்தியாவில் டைஃபாய்டு காய்ச்சலால் ஆண்டுக்கு 49 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும், 8000 பேர் வரை உயிரிழப்பதாகவும் ICMR விஞ்ஞானி காமினி வாலியா தெரிவித்துள்ளார். அதிகம் பயன்படுத்தப்பட்ட புளோரோகுய்னோலோன் மருந்துக்கு டைஃபாய்டு கிருமிகள் தற்போது கட்டுப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உரிய நேரத்தில் டைஃபாய்டு காய்ச்சலை சரியான பரிசோதனை மூலம் கண்டுபிடிக்காததாலேயே உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News January 29, 2026
தேசிய செய்தித்தாள் தினம் இன்று!

இன்று தேசிய செய்தித்தாள் தினம். 1780-ம் ஆண்டு இதே நாளில், நாட்டில் முதல்முறையாக ‘ஹிக்கிஸ் பெங்கால் கெசட்’ செய்தித்தாள் அச்சிடப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் செய்தித்தாள்கள் ஆற்றிய பங்கை நினைவு கூறும் விதமாக, இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்று செய்தித்தாளாக இருந்தவை இன்று, Short News App-களாக மாறியுள்ளன. காலங்கள் ஓட, வடிவங்கள் மட்டுமே மாறியுள்ளன, வீரியம் எப்போதும் ஒன்றே!
News January 29, 2026
கூட்டணி பற்றி விஜய் மட்டுமே அறிவிப்பார்: CTR

தவெகவுடன் கூட்டணி வைத்தால் காங்.,க்கு மீண்டும் பவர் கிடைக்கும் என விஜய்யின் தந்தை <<18982071>>SAC<<>> கூறியிருந்தார். இதையடுத்து எங்களுக்கு யாரும் பூஸ்ட் தரத் தேவையில்லை என செல்வப்பெருந்தகை பதிலளித்திருந்தார். இந்நிலையில், SAC-ன் அழைப்பு என்பது மக்களின் பொதுவான கருத்து என CTR நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். அத்துடன், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் விஜய் அறிவிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 29, 2026
EPS-க்கு தெரிந்தது காலில் விழுவது மட்டுமே: CM ஸ்டாலின்

முஸ்லிம்களுக்கு எதிரான EPS செயல்படுகிறார் என CM ஸ்டாலின் சாடியுள்ளார். அவருக்கு தெரிந்தது காலில் விழுவது, காலை வாரிவிடுவது மட்டும்தான் என்ற அவர், அதிமுக ஆதரவால்தான் 2019-ல் பாஜக அரசு குடியுரிமை சட்ட மசோதாவை ராஜ்ய சபாவில் நிறைவேற்றியது என்றார். மேலும், தற்போது ஒரே மேடையில் நிற்கும் அந்த மக்கள் விரோதக் கூட்டணியை ஒட்டுமொத்தமாக விரட்டும் கடமை அனைவருக்கும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


