News April 8, 2025

டேபிள் பேனை இயக்கியபோது மின்சாரம் தாக்கி பலி

image

பட்டாளம் பகுதியை சேர்ந்த சூர்யா (11) என்ற சிறுவன், நேற்று (ஏப்ரல் 7) தனது வீட்டில் உள்ள டேபிள் பேனை இயக்கியுள்ளார். அப்போது, ஊக்கை கொண்டு டேபிள் பேனை இயக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனை மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட சிறுவனை, குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

Similar News

News April 16, 2025

சென்னை மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு

image

சென்னையில் ஏப்.21-ம் தேதிக்கு பிறகு கட்டடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் டன் ஒன்றுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என கூடுதல் ஆணையர் அறிவித்துள்ளார். மேலும், 1 டன் அளவுக்கு கட்டடக் கழிவுகள் இருந்தால் சென்னை மாநகராட்சி இலவசமாக அகற்றும். 1 முதல் 20 டன் வரை கட்டடக் கழிவுகளை அகற்ற ரூ.3,300 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். *சென்னை வாசிகளுக்கு பகிர்ந்து உஷார் படுத்துங்கள்*

News April 16, 2025

சென்னையில் அரசு வேலை; 12th பாஸ் போதும்

image

சென்னையில், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் காலியாக உள்ள 36 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th, டிப்ளமோ முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.19,500 – ரூ .71,900 சம்பளம் வழங்கப்படும். குறிப்பாக இந்த பணிக்கு எந்த வயது வரம்பும் கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து வரும் ஏப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சென்னையில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News April 16, 2025

நடக்காத விதிமீறல்; வாகனங்களுக்கு அபராதம்

image

சென்னையில் சாலை விதிகளை முறையாக பின்பற்றி வாகனம் ஓட்டுவோருக்கும், விதிமீறலில் ஈடுபட்டதாக மொபைல் போன் எண்ணிற்கு அபராத ரசீது வருவது, ஓட்டுநர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமீபத்தில், இத்தகைய மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும், இத்தகைய குளறுபடி இருந்தால், காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். SHARE IT.

error: Content is protected !!