News January 17, 2026
டெல்லி செல்லும்முன் பற்ற வைத்த மாணிக்கம் தாகூர்

டெல்லி செல்வதற்கு முன் மாணிக்கம் தாகூர் போட்ட பதிவு தான், தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக். டெல்லிக்கு செல்வது எனக்காக அல்ல!, என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்காரர்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதற்காகவும், காங்., உரிமையை (ஆட்சியில் பங்கு) மீண்டும் விட்டு கொடுத்துவிடக் கூடாது என்பதை தலைவர்களிடம் வலியுறுத்தவும் டெல்லி சொல்லவிருக்கிறேன் என பதிவிட்டு புதிய நெருப்பை பற்றவைத்துள்ளார்.
Similar News
News January 28, 2026
ராசி பலன்கள் (28.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 28, 2026
BREAKING: காங்., உடன் திமுக கூட்டணி பேசவில்லை

காங்., கட்சியுடன் திமுக, கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்று தமிழக காங்., பொறுப்பாளர் ஷோடங்கர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். டிச.3-ல் ஸ்டாலினை சந்தித்து, டிச.13-க்குள் கூட்டணி முடிவை உறுதி செய்யக் கோரினோம். திமுகவின் பதிலுக்காக 2 மாதங்கள் காத்திருந்தும், இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்ற அவர், திமுக தரப்பில் இருந்து ஏன் இவ்வளவு தாமதம் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
News January 27, 2026
FLASH: Ex இந்திய கிரிக்கெட் வீரர் கைது

Ex இந்திய வீரர் ஜேக்கப் மார்டின் கார் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. வதோதராவில், மது அருந்திவிட்டு கார் ஓட்டிய அவர் சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த 3 வாகனங்கள் மீது மோதியுள்ளார். இதுபற்றி வாகன உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரேஷ் டிரைவிங், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


