News November 11, 2025
டெல்லி குண்டு வெடிப்பு: காரை ஓட்டிய நபரின் PHOTO

டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டியவர் ஃபரீதாபாத்தில் டாக்டராக பணியாற்றிய ஒமர் முகமது என தெரியவந்துள்ளது. இவருக்கும் ஃபரீதாபாத்தில் வெடிபொருள்களுடன் சிக்கிய கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தன்னுடைய ஆட்கள் போலீசில் சிக்கியதால் பதற்றமடைந்த ஒமர் முகமது, டெல்லியில் காரை வெடிக்க செய்ததாக கூறுகின்றனர். ஆனால், முன்னதாக மக்கள் அதிகம் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனராம்.
Similar News
News November 11, 2025
குண்டு வெடிப்புக்கு மோடி, அமித்ஷா பொறுப்பு: திருமா

நாட்டின் தலைநகரிலேயே, உயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட பகுதியிலேயே காரில் வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு எப்படி ஊடுருவமுடிந்தது என திருமா கேள்வி எழுப்பியுள்ளார். உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘மோடி-அமித்ஷா-அம்பானி’ கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்கவேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
ஒரே அடியாக ₹5,000 உயர்ந்தது

வெள்ளி விலை இன்று(நவ.11) கிலோவுக்கு ₹1,000 அதிகரித்துள்ளது. நேற்று காலையில் ₹2,000, மாலையில் ₹2,000 என உயர்ந்திருந்த நிலையில், 2 நாள்களில் மட்டும் ஒரே அடியாக ₹5,000 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரலாறு காணாத புதிய உச்சமாக கிராம் ₹207-க்கும், பார் வெள்ளி கிலோ ₹2,07,000-க்கும் விற்பனையானது. பின்னர், சரிவை சந்தித்துவிட்டு மீண்டும் ஏறுமுகத்தை கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
News November 11, 2025
குழந்தைகளை காக்க ஆஸி., அரசின் புதிய முடிவு!

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டதால், தற்கொலை எண்ணம், உடல்நலக்குறைவு என குழந்தைகள் சிறுவயதிலேயே சீரழிகின்றனர். இதனை தடுக்க நினைத்த ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் SM பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த தடை டிச.10-ல் இருந்து அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற ஒரு தடை இந்தியாவில் கொண்டுவந்தால் எப்படி இருக்கும்?


