News March 30, 2025
டெல்லியில் வேலுநாச்சியார் புத்தகம் வெளியீடு

புதுடெல்லி கேதார்நாத் சைனி ஆடிட்டோரியத்தில் நேற்று (மார்ச்.29) பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற சிவகங்கை ராணி “வேலு நாச்சியார்” அவர்களின் பெருமையை போற்றும் விதமாக வரலாற்று புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிவகங்கை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட, ஒன்றிய, மகளிர் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Similar News
News April 1, 2025
காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெற அழைப்பு

முன்னாள் படைவீரர் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
News April 1, 2025
தொழில் முனைவோர்கள் பதிவு செய்யலாம் – ஆட்சியர்

ஈரோடு மாவட்டம் ஈங்கூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தொழிற் கூடங்களை குத்தகை மற்றும் வாடகை முறையில் வழங்க திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் https://forms.gle/fZPDgyWUToAAUobt7 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
News April 1, 2025
சிவகங்கையில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.4,5 அன்று விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.