News January 14, 2026

டெல்லியில் விளையாட மாட்டேன்: உலக சாம்பியன்

image

டெல்லியில் நடக்கும் இந்திய பேட்மிண்டன் ஓபனில் இருந்து உலகின் 3-ம் நிலை வீரர் ஆண்டர்ஸ் ஆண்டன்ஸன் விலகியுள்ளார். காற்றுமாசு பிரச்னையால் இந்த முடிவை எடுத்ததாகவும், தற்சமயத்தில் டெல்லியில் போட்டிகளை நடத்துவது சரியாக இருக்காது என்றும், அவர் தனது SM-ல் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து 3-வது முறையாக இதே காரணத்தை சொல்லி தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு ₹4.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 21, 2026

14 மாவட்டங்களில் புதிய டைட்டில் பூங்காக்கள்

image

நேற்று சட்டபேரவையில் ஆளுநர் ரவி உரையில், தமிழ்நாட்டில் மேலும் 14 மாவட்டங்களில் புதிய டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் நிறுவப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாவட்டங்கள்: மதுரை, திருச்சி, ஓசூர், காரைக்குடி, விருதுநகர், நெல்லை, குமரி, ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை கரூர், ஊட்டி, நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகியவை. ஏற்கெனவே 7 மாவட்டங்களில் டைடல் பூங்கா நிறுவப்பட்டுள்ளது.

News January 21, 2026

சாப்பிடும்போது பேசுகிறீர்களா? இது உங்களுக்குதான்!

image

சாப்பிடும்போது பேசுவது செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாய் வழியாக வயிற்றில் அதிகப்படியான காற்று நுழைவது ஏப்பம் மற்றும் வாயு பிரச்னைகளை ஏற்படுத்தும். உணவு, உணவுக்குழாயில் செல்வதற்கு பதிலாக மூச்சுக்குழாய்க்குள் சென்று கடுமையான இருமலை ஏற்படலாம். சரியாக மெல்லாததால், செரிமான சாறுகள் உணவில் கலக்காமல், அமிலத்தன்மை பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

News January 21, 2026

TCL உடன் கைகோர்த்த சோனி

image

சோனி தனது டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் பிரிவை மேம்படுத்த சீன நிறுவனம் TCl உடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. இதில் TCL 51% பங்கையும், சோனி 49% பங்கையும் வைத்திருக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டுத் முயற்சியின் மூலம் Sony Bravia டிவி தயாரிப்பு, விற்பனை மற்றும் பிற செயல்பாடுகளை உலகமெங்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!