News March 19, 2024

டெல்லியில் விருது பெற்ற மதுரை போக்குவரத்து கழகம்

image

சாலைப் போக்குவரத்து நிறுவனம், டெல்லி மூலம் 2022-2023 ஆம் ஆண்டிற்கான எரிபொருள் திறன் மற்றும் 5 ரன்னர் அப் விருதுகளையும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரைக்கு வழங்கப்பட்டது. தமிழக போக்குவரத்து கழக மதுரை கோட்ட நிர்வாக இயக்குநர் ஆறுமுகம் டெல்லியில் சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் சாலைப்போக்குவரத்து & தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகச் செயலாளர் அனுராக் ஜெயினிடமிருந்து விருதினை பெற்றார்.

Similar News

News September 5, 2025

மதுரை: போன் தொலைந்து விட்டதா..நோ டென்ஷன்..!

image

மதுரை மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையதளத்தை கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 5, 2025

மதுரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!

image

மதுரையில் வைகை இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்களில் இணைப்பு பணிகள் மேற்கொள்வதால் வைகை வடகரை, தென்கரைப் பகுதியில் 21 வார்டுகளில் செப்டம்பர் 6 (நாளை) மற்றும் 7 (நாளை மறுநாள்) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. வார்டு எண்கள் 27 முதல் 34 மற்றும் 75 முதல் 93 வரை உள்ள பகுதிகளில் லாரி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரை பயன்படுத்தி கொள்ளலாம். SHARE IT..

News September 5, 2025

BREAKING: மதுரையில் மிக அதிக சாதிய வன்கொடுமை – திருமா

image

மதுரை, அண்ணா பேருந்து நிலையம் அருகே நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்த விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்கள் சந்திப்பில்; தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான சாதிய வன்கொடுமைகள் நடந்துள்ள மாவட்டம் மதுரை. எனவே மதுரை மாவட்டத்தை சாதிய வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என பேசியுள்ளார்.

error: Content is protected !!