News August 11, 2025

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராமநாதபுரம் எம்பி கைது

image

தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர். இதில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியும் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எம்பி நவாஸ்கனி, பாஜகவின் அரசு ஜனநாயக படுகொலையை, வாக்கு திருட்டை அம்பலப்படுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Similar News

News August 11, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் இல்லை

image

காவேரி கூட்டுக்குடி நீர் திட்டத்தில் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள், கூட்டுக்குடி நீர் திட்ட பராமரிப்பு பணிகள் மற்றும் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 12, 13 ஆகிய 2 நாட்கள் காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

மீனவர்களுக்கு வரும் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

image

தொண்டி அடுத்த திருப்பாலைக்குடி மீன் பிடிதுறைமுகத்தில் இருந்து நாட்டுப்பாடகில் மீன்பிடிக்க சென்ற 4 பேர் கடந்த 6ஆம் தேதி கச்சத்தீவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று மீனவர்களின் வழக்கு 2ஆவது முறையாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களுக்கு வரும் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவுவிட்டார்.

News August 11, 2025

ராமநாதபுரத்தில் கஞ்சா வழக்கு: 3 பேர் மீது குண்டாஸ் – எஸ்பி தகவல்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 306 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 190 பேர் கைது செய்யப்பட்டு, 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. கடத்த முயன்ற 185 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. மேலும், 152 வழக்குகளில் 747 கிலோ கஞ்சா மே16 அன்று அழிக்கப்பட்டதாக எஸ்பி சந்தீஷ் தெரிவித்தார்.

error: Content is protected !!