News January 17, 2026
டெல்லியில் ஜொலித்த கோத்தகிரி சிறுமி

டெல்லியில் நடைபெற்ற 39-வது தேசிய சப்-ஜூனியர் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், கோத்தகிரியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி பிரணிதா (12) இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த அந்த மாணவி சொந்த ஊர் திரும்பியபோது, ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் அவருக்குப் பாராட்டு தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.
Similar News
News January 21, 2026
நீலகிரி: கரண்ட் பில் அதிகமா வருதா? இத பண்ணுங்க!

நீலகிரி மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News January 21, 2026
நீலகிரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் (ஜனவரி.23) உதகை ஆட்சியர் அலுவலகம் BLOCK 4 இல், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் ஏராளமான நிறுவனங்கள் கலந்துகொண்டு, வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இதில் பங்கேற்க என்ற <
News January 21, 2026
கூடலூர் மக்களே உஷார்: அதிரடி உத்தரவு!

நீலகிரி மாவட்டம் – T.R. பஜார் முதல் கர்நாடக மாநிலம் குண்டல்பெட் வரை, சாலை இரு புறமும் உள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் , கடைகள் உள்ளிட்டவைகள் உடனடியாக அகற்ற உத்தரவு ஆணையை தேசிய நெடுஞ்சாலைத்துறை பிறப்பித்துள்ளது. சாலையின் இருபுறமும் உள்ள உயர்மட்ட திட்டுக்கள் உணவு வாகனங்கள் தள்ளுவண்டிகள் ஆகியவற்றை அகற்ற, உதகை கோட்ட பொறியாளர் மூலம் நேரடியாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட உள்ளது.


