News September 23, 2024
டெல்லியில் சபாநாயகர் அப்பாவுக்கு வரவேற்பு

10ஆவது காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் இந்திய வட்டார மாநாடு டெல்லியில் இன்று(23.9.2024) நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தமிழ்நாடு இல்லத்தில் உள்ளுறை ஆணையர்(Resident Commissioner) ஆசிஷ் குமார் I.A.S அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கோத்து கொடுத்து வரவேற்றார்.
Similar News
News November 15, 2025
நெல்லை: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

நெல்லை மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE IT.
News November 15, 2025
நெல்லை: பைக் திருட்டு.. தவெக நிர்வாகி கைது!

விஎம் சத்திரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனின் பைக் கடந்த 12ம் தேதி புதிய பஸ் நிலையத்தில் திருடுபோனது. போலீசில் புகார் அளித்தார். சிறிது நேரத்தில் இருவர் பைக்கை தள்ளி வந்த போது போலீசிடம் மாட்டிக் கொண்டனர். விசாரணையில் அவர்களில் ஒருவர் தவெக நிர்வாகி முத்துக்குமார் என்பதும் மற்றொருவர் தங்க ராஜா என்பதும் இன்று தெரிய வந்தது. பெட்ரோல் காலியானதால் பைக்கை அதே இடத்தில் விட வந்த போது மாட்டிக்கொண்டனர்.
News November 15, 2025
நெல்லை: ரேஷன் காட்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


