News December 15, 2025

டெல்லியில் காற்று மாசு உச்சம்: 61 விமானங்கள் ரத்து

image

டெல்லியில் காற்று மாசு மிக தீவிரமாகி வரும் நிலையில், பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 450-க்கு மேல் பதிவானது. இதன் எதிரொலியாக தலைநகரில் அடர்ந்த புகைமூட்டம் காணப்பட்டதால், டெல்லி விமானநிலையத்தில் 61 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் விமான சேவைகளை உறுதிப்படுத்திக்கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

Similar News

News January 8, 2026

8 போர்களை நிறுத்தியும் நோபல் பரிசு இல்லை: டிரம்ப்

image

அமைதிக்கான நோபல் பரிசு வழங்காததற்காக நார்வே மீது தனது கோபத்தை டிரம்ப் வெளிப்படுத்தினார். தனியாக 8 போர்களை நிறுத்திய தன்னை, NATO உறுப்பினரான நார்வே நோபல் பரிசுக்கு பரிந்துரைக்காதது முட்டாள்தனமான செயல் என சாடினார். ஆனால், நோபல் தனக்கு ஒரு பொருட்டல்ல என்றும் பல கோடி உயிர்களைக் காப்பாற்றியதே போதும் எனவும் குறிப்பிட்டார். US இல்லை என்றால் NATO மீது சீனா, ரஷ்யாவுக்கு பயம் இருக்காது எனவும் கூறினார்.

News January 8, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 574
▶குறள்:
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
▶பொருள்: வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?

News January 8, 2026

‘ஜனநாயகன்’ மிகப்பெரிய வெற்றி பெறும்: சிபிராஜ்

image

தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக நடிகர் சிபிராஜ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஜனநாயகன்’ படத்தை சுற்றி நடக்கும் விவகாரங்கள், அதனை பெரும் வெற்றிக்கு அழைத்து செல்லும் என தெரிவித்துள்ளார். மேலும் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!