News August 17, 2025
டெல்டா – பாலக்காடு புதிய ரயில் சேவை தொடக்கம்

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளை கேரள மாநிலத்துடன் நேரடியாக இணைக்கும் புதிய தினசரி ரயில் சேவை மயிலாடுதுறை – பாலக்காடு இடையே தொடங்கப்படுகிறது. மயிலாடுதுறையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லும் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News March 4, 2026
தஞ்சை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தஞ்சாவூரில் நாளை (மார்ச் 5) நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வருகை தர உள்ளனர். கரந்தை தமிழ்ச் சங்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, ராமநாதன் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். முதல்வரின் வருகையையொட்டி தஞ்சாவூர் மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளார். இதன் காரணமாக பாதுகாப்பு காரணம் கருதி வருகிற 5-ம் தேதி அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.