News November 17, 2024

டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. தட்பவெப்ப நிலை மாற்றத்தால் தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல், சளி, இருமல், உடல்வலி, உடல் சோர்வு உள்ளிட்டவற்றால் மருத்துவமனைக்குச் செல்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, மழைக்கால காய்ச்சல் சிறப்பு முகாம், நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க

Similar News

News August 8, 2025

கரும்பு நடவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

image

மதுராந்தகம் சர்க்கரை ஆலைக்கு 2025-26 பருவத்தில் கரும்பு நடவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.7,450 மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அகலபாருடன் கூடிய பரு சீவல் நாற்று நடவுக்கு இந்த மானியம் வழங்கப்படும். 2024-25ம் ஆண்டு 937 விவசாயிகளுக்கு ரூ.2.44 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விவசாயிகள் கரும்பு நடவிற்கு முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 8, 2025

செங்கல்பட்டில் EB கட்டணம் அதிகமா வருதா?

image

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க!

News August 8, 2025

செங்கல்பட்டு: கோயிலுக்கு சொந்தமான இடம் மீட்பு

image

நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் உள்ள ஶ்ரீ நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பில் ஜெய்பீம் நகர் 5வது தெருவில் 1,752 சதுர அடி இடம் உள்ளது. இந்த இடம் சாது சுந்தர்சிங் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் வீடு கட்டப்பட்டிருந்தது. இந்த இடத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று (ஆகஸ்ட் 7) அறநிலையத்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த இடத்தினை மீட்டனர்.

error: Content is protected !!