News December 19, 2024
டெங்குவால் இளம்பெண் பலி

வாலாஜாபேட்டை தேவதானம் ரோடு ஜே.ஜே நகரைச் சோ்ந்த பிரியா (19) நா்சிங் படித்துவிட்டு மருந்துக் கடையில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் ஏற்பட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தாா்.
Similar News
News March 3, 2026
ஆற்காடு எம்.எல்.ஏ மீண்டும் விருப்ப மனு

ராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், ஆற்காடு தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஜே.எல். ஈஸ்வரப்பன், 2026 தேர்தலில் மீண்டும் ஆற்காடு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது விருப்பமனுவைத் தாக்கல் செய்தார். இவர் 2021 தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 3, 2026
அரக்கோணத்தில் அதிரடி கைது!

ராணிப்பேட்டை: மும்பையில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னையை நோக்கி செல்லும்ரயில்களில் மர்மநபர்கள் சிலர் போதை மாத்திரை கடத்திவருவதாக அரக்கோணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடத்தப்பட்ட சோதனையில், 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் போதை மாத்திரை இருந்தது தெரிய வந்ததும் ஆகாஷ்(23), மணிகண்டன்(24), தட்சிணாமூர்த்தி(25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News March 3, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது


