News April 3, 2025
டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்தவர் பூஞ்சோலை. இவரது மகன் ராஜிவ் (9) மகள் ரஞ்சிதா (17). இவர்கள், நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதியில் இருந்து, உலகம்பட்டிக்கு TVS XL-லில் சென்றனர்.அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டின் முன் பக்கம், பெட்ரோல் டேங்க் பகுதியில் தீப்பற்றியது. இதில் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News October 24, 2025
சிவகங்கை பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

சிவகங்கை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News October 24, 2025
சிவகங்கை: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

சிவகங்கை மக்களே,சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கு <
News October 24, 2025
சிவகங்கை நுங்கு வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

சிவகங்கை காமராஜா் நகரை சேர்ந்தவர் பூமிநாதன். இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த முத்துபாண்டி என்பவருக்கும் இடையில் கடந்த 27.4.2018 அன்று நுங்கு வியாபாரம் செய்ததில் பிரச்சனை ஏற்பட்டு மறுநாள் சிவகங்கை வாரச்சந்தை முன் முத்துப்பாண்டியை பூமிநாதன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா். இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அறிவொளி, பூமிநாதனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.


